Headlines News :
Home » » உன் விழி பார்க்கும் முன்பு வரை......

உன் விழி பார்க்கும் முன்பு வரை......

Written By Jeevi Quotes on Saturday, 29 December 2012 | 09:03


"பிறந்து வளர்ந்தேன்"
இப்புவியில் இத்தனை ஆண்டுகள்,,
ஆனால்,,
"உன் இரு விழி பார்த்த தருணம்"
"உணர்த்திவிட்டாய் என்னை எனக்கே"....!!

உன் விழி பார்த்த,,
இரு நொடிகளுக்கு முன்பு வரை,,
நடந்திருப்பேன் பல வீதிகளில்,,
"ரசித்ததில்லை"
"சாலையோர பூக்களை" இதுவரை....!!

கேட்டிருக்கிறேன்,,
பல பாடல்கள்,,
"ரசித்ததில்லை"
"அதன் வரிகளின் சுகங்களை" இதுவரை....!!

என் வீட்டு கண்ணாடியும்,,
"என்னை பார்த்ததில்லை அடிக்கடி"
"உன்னை பார்க்கும் முன்பு வரை"....!!

ரசாயன சாயங்களில்,,
வண்ண வண்ண சட்டைகளை ,,
"ரசித்ததில்லை"
ஆனால் இப்பொழுது ரசிக்கிறேன்,,
"நீ என்னை ரசித்ததற்கு"....!!

"காதல் கவிதைகள் படித்ததில்லை " இதுவரை,,
"உன் விழி பார்த்த இரு நொடி"
"இருநூறு கவிதை தோன்றியது" எனக்குள்ளே...!!

தனிமையில் இருந்து நினைத்ததில்லை யாரையும்,,
ஆனால் இப்பொழுது,,
"தேடுகிறேன் தனிமையை உன்னை நினைப்பதற்கு "....!!

நண்பர்கள் மட்டுமே அழைத்த,,
என் தொலைபேசியில் ,,
"எதிர்பார்த்து காத்திருக்கிறேன்"
"உன் அழைப்பிற்கு பெண்ணே"....!!

உன் விழி பார்த்த முன்னும் பின்னும்,,
என்னை எண்ணி பார்க்கையில்,,
"இரு துருவங்களாய் தெரிகிறது"
எத்துருவம் ஆனாலும் பெண்ணே,,

"உன் விழியீர்ப்பு விசையில் தான் என் புவியீர்ப்பு திசை"

என்று தெரிந்து கொண்டேன் ,,
"உன் இரு நொடி பார்வையில்"......!!!!!
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Total Pageviews

add4

Followers

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. தமிழ் மின்னல்கள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya
Blogger Wordpress Tips