"அம்மா என் பெயர் சொல்லி
அழைக்கும் போதெல்லாம்
மறக்காமல் வந்து விடுகிறது
உன் நினைவு...
பேரழகை இன்னும் இன்னும்
அழகாக்குகிறது
நீ சூடிக்கொண்டு வரும்
வெட்கம்
விட்டுவிட நினைத்தாலும்
முடியவில்லை
எதிலாவது உன்னை நினைவு படுத்தும்
இந்த நினைவுகளை..
சிறகில்லாமல் பறந்து வரும்
காதல் பட்டாம் பூச்சி
நீ...
உன்னைப் பார்த்ததிலிருந்து
களவுபோன கண்களுக்குள்
என் காதல் ஆடுது
கண்ணாமூச்சி ...
முடியாது என்றாலும்
முடியும் என்ற
விருட்சத்தை எனக்குள்
விதைத்தது
நீ...
என்னை கடத்திச் செல்லும்
உன் பார்வைக்கு பின்னே
தொலைந்து போகின்றன
என் கெட்ட பழக்கங்கள்...
பலரும் பலவாறு
நடந்து செல்ல,
நீ மட்டும் எப்படி
அழகோடு செல்கிறாய்.
நீ அன்று சாதாரமாய் தான்
பார்த்தாய் என்னை ,
அன்றிலிருந்து சதா உன்னைப் பார்ப்பதே
வேலையாகி விட்டது
எனக்கு...
அழகை சுமந்து வரும்
கவிதை
நீ..
அந்த கவிதைக்கே
கவிபடித்த கலைஞன்
நான்..
நீ நடந்து செல்லும்
வீதியில்
நடைபயில்கிறது
என் காதல்...
கனவினில் கூட
தொடாமல் பேசும்
உன்னை
தொட்டுவிட துடிக்கிறேன்,
நிலவைத் தொட்டவன்
நானாய் இருக்கட்டும்
என்ற ஆசையில்,,,,
கொடுக்க கொடுக்க
குறையாத செல்வம்
கல்வியாம்!!!
கற்றுக் கொடு
எனக்கான காதல் கல்(ல)வியை...
என் கவிதைகளுக்கு
கிடைத்த
மிகப்பெரிய பரிசு
உன் வாசிப்பு...
என் காதலுக்கு கிடைத்த
மிகப்பெரிய பரிசு
உன் நேசிப்பு..
கவிதையோடு
வாழ ஆசை எனக்கு,
அதற்காகவேனும்
வா இப்போதே காதலிப்போம்..."
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !